Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கினிகத்தேன துப்பாக்கிச் சூடு அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலைகள்

கினிகத்தேன துப்பாக்கிச் சூடு அரசியல் வட்டாரங்களில்  கடும் அதிர்வலைகள்

கினிகத்தேன- பொல்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க,தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக நடந்துள்ள இந்த வன்முறை, அதிகாரத்தில் இல்லாதபோதுகூட அவர்கள் தங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று வாக்காளர்களின் கண்களை திறந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர,“கொலைகாரர்கள் கொல்கிறார்கள். அவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?“ என கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *