Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் சபையின் தேர்தல் மே 19 நடக்கும்! திலங்க – அர்ஜுன களத்தில்

கிரிக்கெட் சபையின் தேர்தல் மே 19 நடக்கும்! திலங்க – அர்ஜுன களத்தில்

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கடந்த 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியுமென கிரிக்கெட் சபை அந்த சபையில் அங்கம் வகிக்கும் சகல சங்கங்களுக்கும் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையில் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதேவேளை அவருக்கு எதிரான அர்ஜுன ரணதுங்கவின் குழுவை சேர்ந்த பலரும் அந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தலைவர்கள் இருவரும் , முன்னாள் உப தலைவர்கள் மூவரும் மற்றும் முன்னாள் செயலாளர் ஒருவரும் இவ்வாறாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *