இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நிலைமைகள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடான சந்திப்பின் போது கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் சபையை இடை நிறுத்த வேண்டுமென அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

Previous Postமைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்
Next Postஅஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் யாழ்.விஜயம்