Search
Monday 19 August 2019
  • :
  • :

கிளிநொச்சியில் அத்துமீறிய அறுவடை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட எழுவர் கைது

கிளிநொச்சியில் அத்துமீறிய அறுவடை ஊடகவியலாளர் ஒருவர் உட்பட எழுவர் கைது

கிளிநொச்சி – முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் மாற்றுவலுள்ள இளைஞன் ஒருவர் தனது தந்தையை தொடர்ந்து ஒன்றரை ஏக்கர் வயல் காணியில் சுமார் முப்பது வருடங்களாக பயிர்ச்செய்து வருகின்றார். இக் காணிக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் காணியின் உரிமையாளரான பெண் ஒருவர் பிரதேச ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து அவ் இளைஞனின் காணியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதோடு, கடந்த வெள்ளிக்கிழமை அவர்களின் காணிக்குள் அத்துமீறி சென்று அறுவடையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.இதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அத்துமீறி அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக, குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் உட்பட ஏழு பேர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் ஊடகவியலாளர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்றயை தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *