Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி ஊடகவியலாளரின் விசாரணைக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

கிளிநொச்சி ஊடகவியலாளரின் விசாரணைக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாக சர்வதேச அளவிலும் இலங்கையிலும் பேசப்பட்டு வரும் நிலையிலும் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக இலங்கை அரசாங்கம் கூறிவரும் நிலையிலும் கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளரான எஸ்.என். நிபோஜனின் தொலைபேசிக்கு வெளிநாடொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய ஊடகங்கள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக பல்வேறு வழி மூலங்கள் ஊடாக தகவல்களையும் செய்திகளையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் பல தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் தொடர்புகளை பேணுவது வழமையான செயற்பாடாகாவே அமைகிறது என கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *