Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளியின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளியின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது

வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று.2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட விளைச்சல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி தற்போது வட மாகாணத்திற்கு பரவியுள்ளது.விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.டப்ளிவ் வீரகோன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக கருதுகின்ற நிலைமையும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.டப்ளிவ் வீரகோன் தெரிவித்துள்ளார்.கென்யா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *