Search
Tuesday 26 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் டிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் சினேகபூர்வமாக பேசி இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சாரதியுடன் பேசிவிட்டு இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியுள்ளார்.இதன்போது தவறி விழுந்த அவர், சில்லுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

டிப்பர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில் முரசுமோட்டடை, ஐயன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.(15)Kilinochchi-Murasumoddai-Accident-4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *