Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கிளிநொச்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது 157இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளாக 79 பேர் தெரிவானதாக தெரிவு பட்டியல் ஒட்டப்பட்டபோதிலும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட 157 குடும்பங்களில் 30 குடும்பங்களுக்கு குறித்த வீட்டுத்திட்டம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர்களில் தனிநபர், அரச ஊழியர் என காரணம் காட்டப்பட்டு 79 பேர் குறித்த பயனாளி பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக கிராம மட்ட அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

பயனாளி தெரிவு இடம்பெற்று 8 மாதங்கள் கடந்த நிலையில், தற்போதுவரை வீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்னவென மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.தாம் வீட்டுத்திட்ட பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது வெறும் எழுத்தில் மாத்திரமே உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டும் மக்கள், இந்த அரசு தம்மீது அக்கறையின்றி செயற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *