Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

 மட்டக்களப்பு நகரில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரின் வீட்டின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு,செல்வநாயகம் வீதியில் 3ஆம் குறுக்கு வீதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கணவன்,மனைவி இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அதேவேளை கணவன் வெளியில் சென்றிருந்தவேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று போதல்கள் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வீட்டின் முன்பகுதியில் சிறிய சேதகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *