Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று நன்றாகத் தெரியும் -எம்.ஏ.சுமந்திரன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று  நன்றாகத் தெரியும் -எம்.ஏ.சுமந்திரன்

அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாகத் தெரியும். கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விமர்ச்சித்து வருவதுடன், குறிப்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை தேர்தல் வியாபாரி என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *