Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குசல் மென்டிசிற்கு அறிவுரை வழங்கிய இரசிகரால் சீற்றமடைந்தார் நடுவர்- இரண்டாவது டெஸ்டில் சுவாரஸ்யம்

குசல் மென்டிசிற்கு அறிவுரை வழங்கிய இரசிகரால் சீற்றமடைந்தார் நடுவர்- இரண்டாவது டெஸ்டில் சுவாரஸ்யம்

இலங்கை அணி இன்று தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடியவேளை மதுபோதையில் இரசிகர் ஓருவர் கூச்சலிட்டுக்கொண்டிருந்ததால் நடுவர் ரொட் டக்கர் சீற்றமடைந்த சம்பவம் இடம்பெற்றது
.இலங்கை அணியின் இரண்டாவது இனிங்ஸில் சிறப்பாக விளையாடி குசல்மென்டிசிற்கு மதுபோதையில் நின்றிந்த இரசிகர் ஓருவர் தொடர்ச்சியாக உரத்த குரலில் ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார் இது ஓரு கட்டத்தில் எல்லை மீறியதுடன் நடுவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியது
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் nhட்டக்கர் அந்த இரசிகரை நோக்கி வாயை மூடிக்கொண்டிருக்குமாறு சைகை காட்டினார் ஆனால் ஜயன் என்ற அந்த இரசிகர் அதனை கேட்கவில்லை எப்படி துடுப்பெடுத்தாடுவது என குசல் மென்டிசிற்கு அவர் தொடர்ந்தும் அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்
இதனால் அவர் இந்திய வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தார்
இதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்ததை தொடர்ந்து சிறிது நேரம் மௌனமாகயிருந்த அவர் பின்னர் மீண்டும் உரத்த குரலில் அறிவுரை வழங்க தொடங்கினார் மூன்றாம் நாள்ஆட்டம் முடியும்வரை அவரது குரல் ஓலித்துக்கொண்டேயிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *