Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குடும்பப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் பிணையில் விடுதலை

குடும்பப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர்  பிணையில் விடுதலை

வடக்கு மாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.யாழ்ப்பாணம், பிராந்திய பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் அத்தியட்சகரினால் சந்தேகநபருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் நபர் ஒருவருக்கு செயலாலோ அல்லது சொற்களாலோ பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்டு ‘பி’ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பம் செய்யது சமர்ப்பணத்தை முன்வைத்தார்.பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர்போல், சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டதுடன், சந்தேகநபருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், வட மாகாண மும்மொழிக் கற்கை நிலையத்துக்கும் இணைக்கப்பட்டார்.

மும்மொழிக் கற்கை நிலைத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு அவர் தொலைபேசி ஊடாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.அதுதொடர்பாக, குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை ஏற்க யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்த நிலையில் பொலிஸ் இணையத்தளம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டை ஆராய்ந்த பதில் பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டை ஏற்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்தார்.இந்நிலையில் குடும்பப் பெண்ணின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலமும் பெறப்பட்டது.அதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *