தலைப்பு செய்திகள்

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவச விநியோகம்

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் இலவச விநியோகம்

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டிலுள்ள விவசாய சமூகத்திற்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்தவொரு அரசாங்கத்திடம் இருந்தும் தீர்வு கிடைக்காத குப்பை பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது. நாட்டில் இதற்கு பின்னர் ஆட்சிக்குவரும் எந்தவொரு அரசாங்கமும் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லாத வகையில் நிலையானதொரு தீர்வை அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தும்.

வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *