Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குரல் பதிவு சீ.டிக்களை பாராளுமன்ற செயலாளரிடம் ரஞ்சன் கையளிப்பதை நான் கண்டென் : ஹர்ஷ எம்.பி

குரல் பதிவு சீ.டிக்களை பாராளுமன்ற செயலாளரிடம் ரஞ்சன் கையளிப்பதை நான் கண்டென் : ஹர்ஷ எம்.பி

15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 சீ.டிக்களை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததை தான் கண்டதாகவும் ஆனால் அவர் அதனை ஹன்சார்ட் பிரிவில் ஒப்படைக்க செல்லும் போது அவருக்கு வந்த சட்ட ஆலோசனையின் பிரகாரமே அங்கு சமர்பிக்க முடியாது போயுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா எம்.பி சபையில் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க எம்.பியினால் எந்தவொரு குரல் பதிவும் கையளிக்கப்படவில்லையென பிரதி சபாநாயகர் சபையில் இன்று அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக விளக்கமளித்து கருத்து தெரிவிக்கும் போதே ஹர்ஷடி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க எம்.பியினால் 15,000 உரையாடல்கள் அடங்கிய 5 சீடிக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக நேற்று நான் சபையில் கூறினேன். இதன் பின்னர் இன்று பிரதி சபாநாயகர் அந்த சீடிக்கள் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார். நான் இங்கு இருக்கும் போதுதான் ரஞ்சன் ராமநாயக்க அந்த 5 சீ.டிக்களையும் கையளித்தார். அதன் பின்னர் ஹன்சாட்டில் ஒப்படைக்குமாறு ரஞ்சன் ராமநாயக்கவை அனுப்பியுள்ளார். அதனை கையளிக்க செல்லும் போது அவருக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லையென சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தடன் அந்த சீ.டிக்களில் ஒன்றும் இயங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *