Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குருநாகலில் சஜித் பிரேமதாச பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க சதி முயற்சி

குருநாகலில் சஜித் பிரேமதாச பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க  சதி முயற்சி

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சதி முயற்சிகள் இடம்பெற்றதாக ஐக்கியதேசிய கட்சி குற்றம்சாட்டியுள்து.இதேவேளை சஜித்பிரேமதாசவின் ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என இணையமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.ஹெலிக்கொப்டர் தரையிறங்கயிருந்த பகுதிக்கான மின்சாரத்தை குருநாகல் மாநாகர சபை துண்டித்தது இதனால் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித்பிரேமதாச பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவதற்கு பல தடவை முயற்சிகளை மேற்கொண்டது ஆனால் அந்த பகுதி முழுவதும் வெளிச்சமற்று கடும் இருளாக காணப்பட்டதால் அது சாத்தியமாகவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமலே பிரச்சார கூட்டத்தை நடத்தவேண்டிய நிலையேற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக்க அபயசிங்க தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *