Search
Tuesday 22 August 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியவில்லை

குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியவில்லை

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

விசாரணைகளை நடத்திய போதிலும் இதுவரை குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த முடியாது.

எதிர்க்கட்சியினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பது உறுதியாகி வருகிறது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி பலருக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பீ. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், எதிர்க்கட்சி அல்லது வேறு எதில் அங்கம் வகித்தாலும் பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *