Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

குழப்பத்தில் மகிந்த!

குழப்பத்தில் மகிந்த!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மகிந்த அணிக்குள் குழப்ப நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒரு பிரிவினர் இருக்கின்ற போதும் சமல் ராஜபக்‌ஷவை களமிறக்குவோமென இன்னுமொரு தரப்பு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் அது தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாது மகிந்த ராஜபக்‌ஷ நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையிலேயே கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் யார் வேட்பாளர் என இன்னும் தீர்மானிக்கவில்லையென மகிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.
இதேவேளை குடும்பத்திற்குள்ளும் இது தொடர்பாக இருவேறுப்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *