Search
Saturday 4 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்!

கூட்டணியின் அன்னம் சின்னத்திற்கும் சிக்கல்!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான சமகி ஜனபலவேகய கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தீர்வு இன்றி முடிவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூடியுள்ள நிலையில் அதன்போது அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த சின்னத்திற்கு அனுமதிவை பெற்றுக்கொள்வதற்காக ஐ.தே.க பிரதிநிதிகள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதும் அதில் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
அன்னம் சின்னத்தை வேறு கட்சியொன்றுக்கு வழங்கப்படும் போது எதிர்வரும் தேர்தலின் பின்னர் அடுத்த பொதுத் தேர்தல் அந்த சின்னத்திற்குறிய கட்சிக்கு அந்த சின்னத்தை பயன்படுத்த முடியாது இதனால் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *