Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ அமைப்பதற்கு முன்வரவேண்டும் என்ற அழைப்பை எட்டாவது நாடாளுமன்றத்திலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருந்தார்.இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் வாரமளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.இதன்போது குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *