Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இந்த தேர்தலில் 13 இலட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் இடம்பெறவுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *