தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பற்றிய விசாரணைகளில் திருப்தி கிடையாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விஜித ஹேரத்தின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். குமரன் பத்மநாதன் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். குமரன் பத்மநாதன் குறித்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதேவேளை, குமரன் பத்மநாதனுக்கு எதிரான பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
R-06