Search
Tuesday 2 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கைத்தொழில் மீள்குடியேற்ற வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக புத்திக்க பத்திரன நியமனம்

கைத்தொழில் மீள்குடியேற்ற வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக புத்திக்க பத்திரன நியமனம்

கைத்தொழில், மீள்குடியேற்ற, வர்த்தக, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த அமைச்சு பதவியை வகித்து வந்த ரிசாட் பதியுதீன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள் காரணமாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையிலேயே ஜனாதிபதியினால், புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில்கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமைபுரியும் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த அமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்து இராஜிநாமா செய்த நிலையில் குறித்த சில அமைச்சுக்களுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.அந்தவகையில், புதிய பதில் அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையில் அமைச்சுப் பொறுப்புக்களை பொற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *