Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கைப்பற்ற போவது யார்? இன்று பலப்பரீட்சை : எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்

கைப்பற்ற போவது யார்? இன்று பலப்பரீட்சை : எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் 47 வாக்களிப்பு நிலையங்களில் இதற்கான வாக்களிப்புகள் நடைபெறவுள்ளது. வட்டார ரீதியில் 17 உறுப்பினர்களும் , விகிதாசார அடிப்படையில் 10 உறுப்பினர்களுமென மொத்தமாக 27 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 53,384 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நாடு பூராகவும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில் அதன்போது எல்பிடிய பிரேதேச சபைக்கான வேட்பு மனுவொன்று தொடர்பான சர்ச்சை நிலையை தொடர்ந்து அந்த பிரதேச சபைக்கான தேர்தலை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி அந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து இன்றைய தினம் அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் பிரதான வேட்பாளர்களுக்கு தமது பலத்தை அறிந்துக்கொள்வதற்கான ஒன்றாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *