Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசி பரீட்சார்த்தம் : ஒஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசி பரீட்சார்த்தம் : ஒஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை

பிரித்தானியாவின் புகழ்பூத்த ஒஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி பரீட்சார்த்தமாக மனிதர்களுக்கு ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக 800 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், முதல் இரண்டு பேருக்கு நேற்றைய தினம் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டது.

800 பேரில் 400 பேருக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசியும் ஏனைய 400 பேருக்கு கட்டுப்பாட்டு பரிசோதனையாக மூளைக்ககாய்ச்சலுக்கு ஏற்றப்படும் தடுப்பு ஊசியும் ஏற்றப்பட்டு அவதானிக்கபப்டும் அவதானிக்கப்படும்.

எவருக்கு எந்த ஊசி ஏற்றப்பட்டது என்பது சோதனை முடியும் வரை தெரிவிக்கப்பட மாட்டாது. சோதனை ஊசியை பெற்றுக்கொள்வதற்கு முன்வந்தவர்களில் ஒருவர் எலிசா கிரெனாட்டோ என்ற  நுண்ணுயிரியல் விஞ்ஞானி. முதலாவது சோதனை ஊசி இவருக்கே ஏற்றப்பட்டது. ஊசியை பெற்றுக்கொண்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை BBC க்கு கருத்து தெரிவித்த அவர் ” நான் ஒரு விஞ்ஞானி , ஆகவே, என்னால் முடிந்தளவு விஞ்ஞான செயன்முறைக்கு உதவ முன்வந்தேன் ” என்று தெரிவித்தார்.

இந்த தடுப்பு ஊசி 3 மாதங்களுக்குள் ஒஸ்போர்ட பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு ஊசியில் தனக்கு மிகவும் நம்பிக்கை இருப்பதாக இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்ட சாரா கில்போர்ட் என்ற பேராசிரியர் கூறினார். இந்த தடுப்பு ஊசி வெற்றியளிக்கும் என்ற 80 சத வீத நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

எவ்வாறு இந்த மருந்து செயற்படுகிறது?

Corona vac

கொரரோனா வைரஸின் spike புரத்துக்கான மரபணுக்களை வைரஸின் மேற்பரப்பில் இருந்து எடுத்து பாதிப்பை ஏற்படுத்தாத வைரசுக்குள் செலுத்தப்பட்டது. இதற்கு மனித குரங்குகளின் இருந்து எடுக்கப்பட்ட adenovirus அறியப்படும் சாதாரண தடிமனின் பலவீனமான பதார்த்தம் பயன்படுத்தப்பட்டது. இது மனிதர்களில் வளர முடியும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்து மனிதர்களுக்கு ஏற்றப்பட்டது. இவ்வாறு ஏற்றப்படும் மருந்து மனித கலங்களுக்குள் சென்றதும் கொரோனா வைரஸின் spike புரதத்தை உற்பத்தி செய்ய தொடங்கும். இதனால், மனிதனின் நிர்பீடன தொகுதி தூண்டப்பட , கொரோனா வைரசுக்கு எதிரான T கலங்களை மனிதனின் நிர்ப்பீடன தொகுதி உற்பத்தி செய்யும். இது கொரோனவின் spike புரத்தினால் தொற்றுக்கு உள்ளான கலங்களை அழிக்கும். இந்த நிலையில், ஒருவர் கொரோனா வைரஸின் தொற்றுக்கு உள்ளாகும் போது, மனித நிர்பீடன தொகுதி அதற்கு எதிராக செயற்பட்டு தொற்றை அழிக்கும்.

coronavirus vaccine 1

தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து 

Sarah Gilbert

சாரா கில்போர்ட் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *