Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா இறப்பு எண்ணிக்கை – சீனாவை முந்தியது மும்பை

கொரோனா இறப்பு எண்ணிக்கை – சீனாவை முந்தியது மும்பை

இந்தியாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் மும்பை, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. ஹூபெய் மாகாணத்தில் வேகமெடுத்த இவ்வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் சீனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக கூறி வருகிறது. அங்கு தற்போது ஒற்றைபடையில் தான் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதன் உண்மை தன்மை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு 83,565 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகவும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 22-வது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கையையும் மும்பை மாநகரம் தற்போது முந்தியுள்ளது. மும்பையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு செவ்வாய் நிலவரப்படி 85,724 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,938 ஆகவும் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது மும்பையானது ஜூலை முதல் தேதியிலிருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்கிறது.

இந்த நிலையில் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு 83,565 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகவும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 22-வது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு எண்ணிக்கையையும் மும்பை மாநகரம் தற்போது முந்தியுள்ளது. மும்பையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு செவ்வாய் நிலவரப்படி 85,724 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,938 ஆகவும் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது மும்பையானது ஜூலை முதல் தேதியிலிருந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்கிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *