செய்திகள்

கொரோனா! சமூகத்திற்குள் பரவ வாய்ப்புகள் அதிகம் : தொற்று நோய் ஆய்வு பிரிவு பிரதானி எச்சரிக்கை

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்குள் பரவியுள்ள கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் தீவிரமாக பரவக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத காலப்பகுதியில் வெலிசரை கடற்படை முகாமில் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் போது நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது அப்போது முகாமில் இருந்தவர்கள் விடுமுறையில் சென்றிருந்தாலும் அவர்களினால் மற்றையவர்களுக்கு பரவியிருக்கவில்லை ஆனால் கந்தக்காட்டில் நிலைமையோ வேறு விதமானது. நாட்டில் தற்போது ஊரடங்கு சட்ட நிலைமையொன்று கிடையாது. இதனால் சமூகத்திற்குள் பரவக் கூடிய வாய்ப்பு அதிகமாகும். கந்தக்காடு முகாமில் உள்ளவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுள்ளனர் இதனால் வைரஸ் சமூகத்திற்குள் பரவும் அபாயம் அதிகமாகும். இதனால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். தேவையில்லாத பயணங்களை தவிர்த்துக்கொள்வதே சிறந்தது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)