தலைப்பு செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நடக்காத காரியம் – போரிஸ் அவநம்பிக்கை

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நடக்காத காரியம் – போரிஸ் அவநம்பிக்கை

உலகெங்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிப்பது என்பது நடக்காத காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்ஸன் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு காப்பாற்றப்பட்டார். அவர் குணமாகி வந்த பின்னர் பிரிட்டனில் கொரோனாவுக்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டன் மருத்துவமனைகளில் சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டுவருகிறது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் கூறுகையில், கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாம் இன்னும் பல கட்டங்களைத் தாண்டவேண்டி உள்ளது. தற்போதுள்ள நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது நடக்காத காரியம் எனவும் சமூக விலகல் மூலமாகவே கொரோனாவை மெதுமெதுவாக ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறி உள்ளார்.

93 மில்லியன் பவுண்ட்களை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பிரிட்டன் அரசு ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனாவின் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது என பிரிட்டன் பார்லிமென்ட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முனையும் நாடுகளில் பிரிட்டன் முக்கிய இடம் வகிக்கிறது என வர்த்தகச் செயலாளர் அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார்.ஆக்ஸ்போர்டு பல்கலை., மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவ மாணவர்கள் கொரோனா ஆய்வில் மும்மரம் காட்டுகின்றனர். இந்நிலையில் போரிஸ் ஜான்ஸனின் இந்த அவநம்பிக்கையான பேச்சு பிரிட்டன் குடிமக்களை சற்று கலக்கம் அடையச் செய்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *