Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் பொதுவெளியில் நடமாடலாம் : எச்சரிக்கும் GMOA ( எச்சரிக்கை அறிக்கை உள்ளே)

கொரோனா தொற்றாளர்கள் பொதுவெளியில் நடமாடலாம் : எச்சரிக்கும் GMOA ( எச்சரிக்கை அறிக்கை உள்ளே)

நாட்டில் தற்போதைய நிலைமையில் அடையாளம் காணப்படாத கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 550 பேராவது இருக்கலாம் எனவும் அவர்கள் சமூகத்தில் நடமாடி வருவருவதற்கான சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் குறைந்தது 19 ஆயிரம் பேருடனாவது தொடர்புகளை பேணியிருக்கலாம் எனவும் இப்படி இருந்தால் நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 101 பேர் வரையிலானோரே புதன்கிழமை (நேற்று) நண்பகல் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வறாக அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பின்னர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களாகும். ஏனைய 69 பேரும் தொற்றுக்குள்ளானோரிடம் தொடர்புகளைப் பேணியதால் பாதிக்கப்பட்டவர்களாகும்.
தற்போதைய கணிப்பீட்டின் படி 550 பேராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடும் என்பதோடு இவர்கள் சமூகத்தில் பொது வெளியில் நடமாடுபவர்களாகவும் இருக்கலாம் . இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாதவர்களாக இருப்பார்களாயின் இவர்கள் சுமார் 19 ,000 வரையிலான நபர்களுடன் தொடர்புகளைப் பேணியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன . எனவே தொற்று நோய் தடுப்பு பிரிவு , இராணுவம் மற்றும் பொலிஸார் இவர்களைத் தேடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர் . இந்த கணிப்பின் பிரகாரம் 550 தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படுபவர்களும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடிய 19 ,000 பேரும் பொது வெளியில் நடமாடுவார்களாயின் அது இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அத்தோடு கொழும்பு , கம்பஹா , புத்தளம் , களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் மூடப்பட்டமை , பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட நடவடிக்கைகளால் மக்கள் ஒன்று கூடல்கள் 50 வீதமாவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 75 வீதம் மக்கள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமாகுமென்பதுடன் மார்ச் 25 முதல் ஏப்ரல் 7 வரையான காலப்பகுதிக்குள் சமூக இடைவெளிகளை பேணுவது அவசியமானது எனவும் இல்லாவிட்டால் ஆபத்தை தடுக்க முடியாது போகும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *