Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் கொழும்பு அங்கொடயில் அமைந்துள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி ஒருவரும் மற்றும் இந்நாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ள சீன நாட்டு பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசித அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர்களுடைய சளி மாதிரிகள் மற்றும் இரத்த மாதிரிகள், சோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *