Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொலை முயற்சியிலிருந்து தப்பினார் பாலஸ்தீன பிரதமர்

கொலை முயற்சியிலிருந்து தப்பினார் பாலஸ்தீன பிரதமர்

பாலஸ்தீன பிரதமர் ரமிஹம்டல்லாவை கொலை செய்வதற்கு இடம்பெற்ற முயற்சியிலிருந்து அவர் உயிர்தப்பியுள்ளார் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரதமரின் வாகனத்தொடரணியை இலக்குவைத்து காஸாவில்குண்டொன்று வெடித்துள்ளது என பாலஸ்தீன அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு காரணமாக மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளன எனவும் பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் பிரதமருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகாரசபை ஹமாஸ் உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது.
மேற்குலகு சார்பு பிரதமர் ஹமாஸ் அமைப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டள்ள தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *