Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொள்ளையிட போய் பொலிஸாரை நோக்கி விளையாட்டு துப்பாக்கியை காட்டியவருக்கு நேர்ந்த கதி

கொள்ளையிட போய் பொலிஸாரை நோக்கி விளையாட்டு துப்பாக்கியை காட்டியவருக்கு நேர்ந்த கதி

ஹொரணை நகரில் அதிகாலை வேளையில் நிதி நிறுவனமொன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ள ஹொரணை பொலிஸ் நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஒலி எழுப்பி கருவி இயங்கியுள்ள நிலையில் அது தொடர்பாக உசாரடைந்த பொலிஸார் அந்த இடத்திற்கு சென்ற போது அங்கிருந்து அந்த நபர் பொலிஸாரை நோக்கி கைத்துப்பாக்கியொன்றை காட்டியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தி மடக்கிப்பிடித்துள்ளனர்.
அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அந்த நபர் காட்டிய துப்பாக்கி உண்மையானது அல்ல விளையாட்டு துப்பாக்கியென தெரியவந்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *