Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்

கொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்

கொட்டிகாவத்த பகுதியில் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொழும்பில் சில பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொழும்பு 10 மற்றும் 12க்கு உட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறாக நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களில் நாளை காலை 8 மணி வரையில் நீர்விநியோகம் தடைப்பட்டிருக்குமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு 11 மற்றும் 13க்கு உட்பட்ட பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்துடனான நீர்விநியோகம் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *