Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்புத் தமிழ்த் சங்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்: நிதி நெருக்கடிக்கடியால் செலவைக் குறைப்பதற்கும் பரிந்துரை

கொழும்புத் தமிழ்த் சங்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்: நிதி நெருக்கடிக்கடியால் செலவைக் குறைப்பதற்கும் பரிந்துரை

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பலவரைத் தடுப்பதற்கான பொதுமுடக்க நிலைவயின் பின்னரான சூழலில் தலைநகரத்தில் இயங்கும் கொழும்புத் தமிழச் சங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மனோகரன் தெரிவித்தார். பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிதிவழங்கும் நன்கொடையாளர்களிடம் இருந்தும் நிதியைப் பெறமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழச் சங்கத்தின் இரண்டாவது பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் ஆ.குகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

சுகாதாத் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாகவும் சுகாதாரப் பதிசோதகர்களின் அனுமதியோடும் கூட்டம் இடம்பெற்றது.

சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பொதுமுடக்கத்தின் பின்னரான நிலையில் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் நிதி நிலமைகள் தொடர்பாக விளக்கமளித்துச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விபரம் வருமாறு-

திட்டமிடப்பட்டு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிதியைச் சேகரிப்பதற்குரிய காலஅளவு நிர்வாகக்கு குழுவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. பொதுமுடக்க நிலையின் பின்னரான சூழலில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஆர்வலர்கள் உள்ளிட்ட நிதி நன்கொடையாளர்கள் பலரும் நிதிநெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதால், அவர்களிடம் இருந்தும் சங்கத்தின் வளர்ச்சிக்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவொரு நெருக்கடியான நிலைமை தோன்றியுள்ளது.

இந்த நிதி நெருக்கடிப் பிரச்சினை என்பது அடுத்துப் பொறுப்பேற்கவிருக்கும் புதிய நிர்வாகக்குழுவும், எதிர்நோக்கவுள்ள பாரிய சவாலாகவே அமையவுள்ளது. இவ்வாறான சூழலில் சங்கத்திற்குரிய நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பான புதிய நிதிப் பொறிமுறையொன்றை எல்லோரும் இணைந்து வகுக்க முன்வர வேண்டும்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம்; வெளியிட்ட உலக நிதி நெருக்கடி குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள், எதிர்கால நிதிநெருக்கடி நிலைமை பற்றிய ஆபத்துக்களைக் கோடிகாட்டுகின்றன.

பண்பாட்டு நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக சமூக சேவைகள் திணைக்களமும் தெரிவித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் செலவுச் சுருக்கங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் சாத்தியமான திட்டங்களை; வகுக்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்றோம். இவ்வாறான செலவுச் சுருக்கங்கள், கோவிட் 19 அவசரகால நிலைமையின் பின்னரான சூழலில் தோன்றியுள்ள உலக நிதிக்கொள்கைக்கு அமைவானதாக இருக்க வேண்டுமெனவும்.

சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் பட்டயக்கற்கை பதிவு செய்யப்பட வேண்டுமென ஆரம்பத்தில் இருந்தே பேசபட்டு வருகின்றது. சங்கத்தின் தலைவர் குகமூர்த்தியின் முயற்சியினால் பேராசிரியர்களான சோ.சந்திரசேகரம், வ.மகேஸ்வரன், த.தனராஜ் மற்றும் கலாநிதி க.ரகுவரன் ஆகியோர் பட்டயக் கற்கை நெறியைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பேரவை உறுப்பினர் இந்திரகுமார் அவர்களுக்கு வழங்கினர்.

அதன் பிரகாரம் இலங்கைத்தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுத் தற்போது 75 வீதமான வேலைத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. தேசிய பயிற்சி நிறுவனம் வழங்கிய விண்ணப்பப் படிவம் ஒன்றில் பாடத்திடடங்கள் பற்றிய விபரங்கள் அதற்கான நேர அளவு குறித்த விபரங்கள் அனைத்தும் இந்திரக்குமார் அவர்களினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முடக்க நிலை ஏற்பட்டிருக்கவில்லையானால் இந்த முயற்சி இன்று கைகூடியிருக்கும். ஆனாலும் அடுத்த சில மாதங்களில் அந்தப் பணியை இந்திரகுமார் அவர்கள் எமது சங்கத்தின் புலமைக்குழுவின் ஒத்துழைப்போடு செய்து முடிப்பாரென நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்திற்கு முன்னாரான அதற்குப் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இங்கு தலைமையுரை நிகழ்த்திய ஆ.குகமூர்த்தி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் பின்னரான சூழலில், நிலமையை அவதானித்தே சங்கச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்று கூறினார். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *