Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா

கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவின் கலை விழா

கொழும்பு இந்துக் கல்லூரியின் ஆரம்ப பிரிவு பெருமையுடன் வழங்கும் கலை விழா நாளை காலை 9 மணிக்கு கல்லுரி அதிபர் ப.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

கொழும்பு இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு-04 இல் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்வித்துறை தலைவர் கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினராக அகில இலங்கை இந்து மன்றப் பொருளாளர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *