Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கொழும்பு , கம்பஹா மாவட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

கொழும்பு , கம்பஹா மாவட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆட்டோ , கார் உள்ளிட்ட வாடகை வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு பணிகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் பணிக்கு செல்லும் போது அவர்களுக்கு தனியார் வாகனங்களில் பயணிக்க முடியும். இதன்படி அவர்கள் ஆட்டோ அல்லது கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பணிக்கு செல்லவோ பணி முடிந்து வீட்டுக்கு வரவோ முடியும். ஆனால் அவர்கள் அந்த வாகனங்களில் பயணிக்கும் போது தாம் பணிக்கு செல்லும் அல்லது பணி முடிந்து வருவதற்கான ஆதாரங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
அத்துடன் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாடகை வாகன சாரதிகள் பணியாளர்களை அழைத்துச் செல்லும் போது அவர்களிடம் பணிக்கு செல்லும் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் ஆவணம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று சாரதிகள் தாங்கள் அழைத்துச் சென்றவதை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிய பின்னர் அந்த நபரை அழைத்துச் சென்றதற்கான ஆதாரங்கள் எதனையாவது வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் அந்த நபரின் பணியிட ஆவணங்களில் எதனையாவது கையடக்க தொலைபேசியில் வைத்திருக்கலாம். இல்லையேல் அந்த நபரின் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் மூலம் வீதி கடமையில் இருக்கும் பொலிஸார் கேட்கும் போது சமர்பிக்க வேண்டி வரலாம்.
அதேபோன்று பணியாளர் ஒருவரை ஓர் இடத்தில் இறக்கிவிட்டு வந்தால் தனிப்பட்ட தேவைகளுக்காக செல்லும் யாரையும் ஏற்றிச் செல்ல முடியாது. சாரதி மாத்திரமே வண்டியில் இருக்க முடியும். பணியாளர்கள் தவிர வேறு யாரையும் ஏற்றிச் சென்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *