Search
Monday 21 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாபயவின் பிரச்சார நடவடிக்கையில் இராணுவத்தினர்

கோட்டாபயவின்  பிரச்சார நடவடிக்கையில் இராணுவத்தினர்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றனர்.அத்துடன் பிரதான கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அம்பாறைக்கு செல்லவுள்ளார்.இதேவேளை, கோட்டா இன்றைய தினம் அம்பாறைக்கு செல்லவுள்ள நிலையில், ஓய்வு பெற்ற இராணுவத்தினர் அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில் அவருடன் இணைந்து பணியாற்றி சிலரும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோட்டா இன்றைய தினம் பங்கேற்கும் நிகழ்வுகான மேடை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றிக்கான பொருட்களும் அம்பாறையிலுள்ள இராணுவ முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கட்சி காரியாலயத்தினை திறந்து வைக்கும் நோக்கிலேயே இன்று வெள்ளிக்கிழமை)நண்பகல் அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *