தலைப்பு செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம்

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம் 09.11.2019 அன்று காலை நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தலைமையில் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ஜீ.எல். பீரிஸ், சீ.பீ.ரத்நாயக்க, ஆறுமுகன் தொண்டமான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலும் அமுனுகம, சதாசிவம், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ மற்றும் முக்கியஸ்தரகள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினுடைய நுவரெலியா மாவட்ட இளைஞர் அணியுனுடைய செயலாளர் திரு. மணித் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டார்.

பெருமளவான ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

DSC03191 vlcsnap-2019-11-09-14h09m04s261 DSC03210 DSC03195


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *