Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை ஆரம்பம்

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தும் மனு மீதான விசாரணை ஆரம்பம்

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை கோட்டா பெற்றுக் கொண்டது சட்டவிரோதமானது எனவே அவை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *