Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காட்டிலுள்ள காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஐபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கோட்டாவை கைது செய்,குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தி பக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்து,கோட்டா ஒரு உயிர் கொல்லி , எமது பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை,ஐநா அமைதிப் படை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று ஆகிய கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.(15)1 2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *