Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோண்டாவில் பகுதியில் வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக்கொலை

கோண்டாவில் பகுதியில் வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக்கொலை

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் நுழைவாயிலில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.61 வயதுடைய குறித்த மூதாட்டி இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *