Search
Sunday 9 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாபய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு : பிரச்சினைகளுக்கு அரசாங்கமே காரணம் என்கிறார்

கோதாபய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு : பிரச்சினைகளுக்கு அரசாங்கமே காரணம் என்கிறார்

மகாநாயக்க தேரர்களின் யோசனைகளை மதிக்காது அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேசத்தின் ஆலோசனைகளை பின்பற்றி நாட்டின் மதம் , கலாச்சரம் மற்றும் இறைமை தொடர்பாக கவனம் செலுத்தாது அரசாங்கம் செயற்படுவதாகவும் இதுவே நாட்டில் தற்போதைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய கல்கஹபொத்தவிலுள்ள பவரகிரி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைகளை பார்க்கும் போது அதற்கு பிரதானமாக மாகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் யோசனைகள் மற்றும் போதனைகளுக்கு செவி சாய்க்காது நாட்டை நிர்வகிப்பதே காரணமாக அமைந்துள்ளது என்றே கருதுகின்றேன். நான் இவ்வாறான பிரச்சினைகளின் போது அன்று நான் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று பல்வேறு மதத் தலைவர்களை கலந்துரையாடல்களுக்கு அழைத்து பிரதான நாயக்க தேரர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டு செயற்பட்டன். ஆனால் இன்று துரதிஸ்டமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இவ்வாறு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு நாட்டில் மதம் , கலாச்சாரம் , இறைமை போன்றவற்றின் பெறுமதியை மறந்து செயற்படுவதனாலேயே இவ்வாறாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் என குறிப்பிட்டிருந்தாலும் அது அரசியலமைப்பில் வசமாக மாத்திரம் இருந்து பலனளிக்காது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *