Search
Wednesday 22 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

கோதாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

அம்பாந்தோட்டை மெதமுலன டீ.ஏ.ராஜபக்‌ஷ அருங்காட்சியத்தை அமைப்பதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு தனக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணையை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது பெரும்பான்மையான நீதியரசர்களின் இணக்கப்பாட்டுடன் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணை தொடரவுள்ளது.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *