Search
Sunday 20 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோதாவை ஜனாதிபதியாக்க அமெரிக்கா இடமளிக்காது! தூதுவரின் கருத்தால் குழப்பத்தில் மகிந்த அணி

கோதாவை ஜனாதிபதியாக்க அமெரிக்கா இடமளிக்காது! தூதுவரின் கருத்தால் குழப்பத்தில் மகிந்த அணி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எவ்வகையிலும் இடமளிக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பவுள்ள அதுல் கேஷப் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி கோதாபய ராஜபக்‌ஷவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்க வேண்டாமென்பதனையே அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் கொழும்பு அரசியலில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோதாபயவை களமிறக்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதால் இது அவர்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவினால் இவர் போட்டியிடுவதனை தடுப்பதற்கான சட்டங்கள் கிடையாது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் அவ்வாறான எந்த கருத்தையும் தன்னிடம் கூறவில்லையென மகிந்த ராஜபக்‌ஷ ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *