Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோத்தபாய அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் சமூக ஊடகங்களில் வெளியாகிய ஆவணம் போலியானது என தகவல்

கோத்தபாய அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம் சமூக ஊடகங்களில் வெளியாகிய ஆவணம் போலியானது என தகவல்

2013 மார்ச் 13 இல் அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச 2019 யூலை ஐந்தாம் திகதி அமெரிக்க பிரஜாவுரிமையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் துறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரின் கையொப்பமும் தூதரக இலச்சினையும் காணப்படுகின்றது.எனினும் குறிப்பிட்ட திகதியில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அவர் யூலை ஐந்தாம் திகதி இருதய சத்திரகிசிச்சையின் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.மேலும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் கோத்தபாய ராஜபக்ச 2003 ஜனவரி மாதத்திலேயே அமெரிக்க பிரஜையானார் என்பதை புலப்படுத்தியுள்ளதாக ஆங்கில செய்தி இணையமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என ஆங்கில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரஜாவுரிமையை கைவிட்டவர்களிற்கு வழங்கப்படும் ஆவணம் போன்றதொரு ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதுமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறான ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் என சந்தேகிக்கபடுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *