Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோப் குழு தொண்டமானிடம் விசாரணை

கோப் குழு தொண்டமானிடம் விசாரணை

தொண்டமான் பவுண்டேசன் தொடர்பாக பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற கோப் குழுவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பவுண்டேஷனில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதைப்பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், வாய்மூலம் தெரியாது எனக் கூறுவது பொறுத்தமற்றது என கோப் குழு பதிலளித்துள்ளது.

எனவே, தொண்டமான் பவுண்டேசன் தோட்ட உட்டமைப்பு அமைச்சின்கீழ் இருந்ததால் இதுகுறித்த விவகாரங்களை கணக்காய்வு செய்ய செய்ய கோப் குழு தீர்மானித்துள்ளது.

தொண்டமான் பவுண்டேசனில் இந்தியப் பெண் ஒருவர் ஆலோசகராக நியமக்கப்பட்டு அவருக்கு அளவு அதிகமான சம்பளம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களும் கோப் குழுவின் ஊடாக தேசிய கணக்காய்வு அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *