தலைப்பு செய்திகள்

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம்

சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம்

இலங்கை கிரிக்கட் வீரர்களில் நல்லவர், நேர்மையாயனவர், இனவாதம் அற்றவர் என்று எல்லாம் தமிழ் இளைஞர் , யுவதிகளினால் பாராட்டி மிகவும் மதிக்கப்பட்டுவந்த முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை வென்றதாக தென் இலங்கையில் கொண்டாடப்படும் மே 19 வெற்றி நாளில் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து அவரின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்களின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள அவர் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருட்டுக்கு கூட  சிறு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை என்றும் இது அவரின் இனவாத மனநிலையை படம்போட்டு காட்டுகின்றது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“எமது தேசத்துக்காக இந்த நாளில் உச்சபட்ச தியாகத்தை செய்த வீரமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகின்றோம். பிரார்த்தனை மற்றும் நன்றி உணர்வுகளுடன் எமது சிரம்களை தாழ்த்துகின்றோம்” என்று சங்ககார தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Screenshot (1)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *