Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கண்டியிலுள்ள ரெஜின ஹோட்டலில் இன்று முற்பகல் அந்த விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
விஞ்ஞாபனம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வேட்பாளர் சஜித் பிரேமதாச மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் அதனை கையளித்து ஆசி பெறவுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த ஹோட்டலில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *