புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளே அதியுட்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் முழுமையாக்கப்படும் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளனவென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவைகளை அவர் நிறைவேற்றுவார் என்று தான் கூறவரவில்லை என்றும் ஆனால் இவற்றினையெல்லாம் செய்வேன் என்று கூறக்கூடிய துணிவு அவருக்கு இருந்திருக்கின்றதென்றும் குறிப்பிட்டார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.(15)