Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்துக்கு சாதகமான சமிக்ஞை : ஆனாலும் பிரதமருடான பேச்சில் இணக்கமில்லை

சஜித்துக்கு சாதகமான சமிக்ஞை : ஆனாலும் பிரதமருடான பேச்சில் இணக்கமில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கம் இடையே நேற்று இரவு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாதே முடிவடைந்துள்ளது.
நேற்று இரவு 9.40 மணி முதல் 11 மணி வரையில் அலரிமாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார , மலிக் சமரவிக்கிரம , கபீர் காசீம் , ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தனது நிலைப்பாட்டை சஜித் பிரேமதாசவுக்கு விளக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சிகளின் நிலைப்பாடுகளையும் பெற்று இணக்கப்பாடொன்றுக்கு வர நடவடிக்கையெடுப்போம் என பிரதமர் அவரிடம் கூறியுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச குறித்த பேச்சுவார்த்தை சாதகமான சமிக்ஞையாக இருந்துள்ளதாகவே தெரிவித்தள்ளார்.
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றியே முடிவடைந்துள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *