Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சஜித்துடன் இணக்கத்திற்கு வரும் ரணில்

சஜித்துடன் இணக்கத்திற்கு வரும் ரணில்

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சிக்குள் பெருமளவான எம்.பிக்கள் கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் அது தொடர்பாக கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி கட்சிக்குள் வாக்கெடுப்பை நடத்தி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆராய்வதாக பிரதமர் ரணில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளையில் நடத்தப்பட்ட கூட்டத்தை போன்று நாடு பூராகவும் சஜித்துக்கு ஆதரவான கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இவ்வாறாக இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *